கர்நாடக அரசின் நீர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்

பெங்களூரு: கர்நாடக அரசின் நீர் பாசன திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார். தீர்ப்பாயம் அமைக்கிறோம் என்று கூறாமல் முதலில் 2 மாநில அரசுகளிடமும் ஆலோசித்து அதன் மூலம் நல்ல முடிவை எடுக்க வேண்டும். தாங்கள் ஆட்சி அமைத்து ஒரு மாதமே ஆனதால் தற்போது மத்திய அரசு எடுக்கும் முடிவு குறித்து கர்நாடக மக்களின் நிலையை எடுத்துரைக்க கால அவகாசம் வேண்டும். உச்சநீதிமன்றத்தில் 12 வார அவகாசத்தை கேட்டு அதற்குள் புதிய நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!