கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சொத்து குவிப்பு சிபிஐ விசாரணைக்கான அனுமதி வாபஸ்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ ஆட்சி இருந்தபோது கடந்த 2017ம் ஆண்டு டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கின. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்துவந்த நிலையில், 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் எடியூரப்பா, டி.கே.சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய மறுத்தது. இந்த நிலையில், சிபிஐ விசாரிக்க வழங்கப்பட்ட ஒப்புதலை வாபஸ் பெறுவதென்று நேற்று முன்தினம் நடந்த கர்நாடக மாநில காங்கிரஸ் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்