கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 1,518 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 9,369 கனஅடியாக உள்ள நிலையில் 518 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. கபினி அணைக்கான நீர்வரத்து 5,560 கனஅடியாக உள்ள நிலையில் 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 77 அடியாக உள்ளது.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு