கர்நாடகாவில் சென்னை பெண் மருத்துவர் மர்ம மரணம்

கொள்ளேகால்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகர் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வந்தவர் சிந்துஜா (28). இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருந்ததாக கூறப்படுகிறது. சிந்துஜா நேற்று மருத்துவமனைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவமனையின் ஊழியர் லோகேஷ்வரி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் பெற்றோர் சென்னையில் இருந்து வந்து புகார் கொடுத்த பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை