கர்நாடகாவில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள்; மக்கள் அதிருப்தி..!!

பெங்களூரு: கர்நாடகாவில் பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைக்காக பொதுமக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று கர்நாடகா வருகை தந்துள்ள பிரதமர் மோடி, பெல்லாரி மற்றும் கூம்குருவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். நாளையும், நாளை மறுத்தினமும் பிரதமர் மோடி 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி சென்று 19 தொகுதிகளில் ஆதரவு திரட்ட திட்டமிட்டிருக்கிறார். நாளை மறுதினம் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் பிரதமரின் தேர்தல் பயண திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமர் மோடி நாளை 26 கிலோ மீட்டர் திறந்தவெளி வாகனத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு 17 தொகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார். நாளை மறுதினம் காலை 11 மணிக்குள் 10 தொகுதிகளில் பிரதமர் வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார். பிரதமரின் 2 நாள் பேரணி நடைபெறும் பொழுது அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள பொதுமக்கள் மாடிகளில் நிற்கக்கூடாது என காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் பேரணியின்போது சாலைகள் முழுவதுமாக முடக்கப்படும் என்பதால் குறிப்பிட்ட சமயத்தில் பொதுமக்கள் போக்குவரத்தை தவிர்க்குமாறு காவல்துறை உத்தரவிட்டிருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு