கர்நாடகாவில் முதல்வர் தலைமையில் முதல் சட்டப்பேரவை கூட்டம்: தற்காலிக சபாநாயகராக ஆர்.வி.தேஷ்பாண்டே நியமனம்

பெங்களூரு: ஆட்சி மாற்றம் ஏற்பட்ட கர்நாடகாவில் புதிய சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட இருக்கும் 135 பேரும் தற்காலிக சபாநாயகர் ஆர்.வி. தேஷ்பாண்டே முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. அம்மாநில முதலமைச்சராக சித்தராமையாவுக்கு ஆளுநர் தவர்சன் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து முதலமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் வெற்றி பெற்ற 135 எம்.எல்.களும் பதவி ஏற்று கொள்ளும் விதமாக முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டேவுக்கு ஆளுநர் பதவி பிராமணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து எம்.எல்.க்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்று கொண்டனர். முன்னதாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருப்பதை அறிந்ததும் காலையிலேயே பேரவை வளாகத்திற்கு வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வளாகம் முழுவதுமாக மாட்டு கோமியம் தெளித்து சிறப்பு பூஜை செய்தனர். சட்டப்பேரவையை சுத்திகரிப்பு செய்வதாக நிர்வாகிகள் கூறினர்.

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு