கர்நாடக சட்டமன்ற தேர்தல் காங். வேட்பாளர்கள் 2வது பட்டியல் வெளியீடு

பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் 42 பேர் அடங்கிய 2வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெறுகிறது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இப்போதே கர்நாடகாவுக்கு வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 124 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு விட்டது. இதில், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடகா மாநில காங்., தலைவர் சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 93 இடங்களுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு குழப்பங்களால் சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாம்.

இந்நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் கூறுகையில், தேர்தல் தொடர்பான குழு மீண்டும் கூடுகிறது. வேட்பாளர்களை எவ்வளவு விரைவாக அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவித்து விடுவோம் என்றார். தற்போது வேட்பாளர் பட்டியலில் இழுபறி தொடருவதால் எஞ்சிய 100 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க கூடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இன்று 42 வேட்பாளர்களை கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்