கர்நாடகா 25 ஆண்டுக்கால வளர்ச்சிக்கான திட்டம் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு: பிரதமர் மோடி

கர்நாடகா: கர்நாடகா சட்டசபைத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான 224 வேட்பாளர்கள் பட்டியலில் 50க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு பா.ஜ.க வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் விளைவாக ஜெகதீஷ் ஷெட்டர், லக்ஷ்மண் சவடி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிலர் பா.ஜ.க-விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இது கர்நாடக பா.ஜ.க தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க தொண்டர்களுடன் காணொளி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, பா.ஜ.க-வுக்கும் மற்ற கட்சிகளுக்குமிடையேயுள்ள மிகப்பெரிய வித்தியாசம் அணுகுமுறை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான பாதையின் வரைபடத்தில் பா.ஜ.க தீவிரமாகச் செயல்படுகிறது.

நமது போட்டியாளர்களின் செயல்திட்டம் ஆட்சியைப் பிடிப்பதுதான். ஆனால், நமது செயல்திட்டம் 25 ஆண்டுகளில் இந்த நாட்டை வளர்ச்சியடையச் செய்வது.வறுமையிலிருந்து விடுபடவும், இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்துக்குத் தலைமை தாங்கும் வகையில் கர்நாடகாவில் இளம் அணியை பா.ஜ.க உருவாக்கி வருகிறது. கர்நாடகாவில் பெங்களூருபோல பல உலகளாவிய மையங்களை உருவாக்குவது எங்கள் முயற்சி. இரட்டை இன்ஜின் ஆட்சி என்பதன் பொருள் வளர்ச்சியின் இரட்டை வேகம். பா.ஜ.கவின் இரட்டை இன்ஜின் அரசு இருக்கும் இடங்களில் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் வேகமாகச் செயல்படுத்தப்படுவதை அனுபவபூர்வமாக உணர்கிறோம்.

ஆனால், சில மாநிலங்கள் திட்டங்களின் பெயரை மாற்றுகின்றன. இன்னும் சில நாள்களில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காகக் கர்நாடகாவுக்கு வரவிருக்கிறேன். கர்நாடகா மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறவிருக்கிறேன். பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரகர்கள் வரும்போதெல்லாம் மக்கள் அளப்பரிய அன்பை வழங்குகிறார்கள். இது பா.ஜ.க-மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Related posts

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை