கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு தேரோட்டம் கோலாகலம்

சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு விழாவையொட்டி நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் ராஜா, சதன்திருமலைக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி நாளை(ஞாயிறு) மாலையில் நடக்கிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி தபசு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15ம் தேதி காலை 6.50 மணிக்கு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான 11ம் திருநாளான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் சதன்திருமலைக்குமார், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து, பஞ்சாயத்து தலைவர்கள் மாரியப்பன் தினேஷ், சரவண பெருமாள், பாஜக ஒன்றி பொதுச் சயலாளர் சண்முகவேல், பழனிவேல் ராஜன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆவணித்தபசு 13ம் திருநாளான (27ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related posts

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை