பந்தலூர் அருகே இன்று பரபரப்பு: கறிக்கோழி வேன் கவிழ்ந்து விபத்து

பந்தலூர்: பந்தலூர் அருகே இன்று அதிகாலை கறிக்கோழி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து பந்தலூர், சேரம்பாடி மற்றும் எருமாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கறிக்கோழியை இறக்குவதற்காக பிக்அப் வேன் ஒன்று புறப்பட்டது. வேனை பந்தலூரை சேர்ந்த சாஜி (28) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் பந்தலூர் பஜாரில் உள்ள கடைகளில் கறிக்கோழிகளை இறக்கி விட்டு மீண்டும் வயநாடு திரும்பியது. பந்தலூர்- சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பந்தலூர் புதிய பஸ் நிலையம் ரேஷன்கடை அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள வீடு முன்பு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிகாலை நேரம் என்பதால் வீடு முன்பு யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். வேன் கவிழ்ந்ததில் அதிலிருந்த கறிக்கோழிகள் சிக்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேவாலா போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கிரேன் மூலம் பிக்அப் வேனை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!