கார்கில் போர் 25வது ஆண்டு வெற்றி தினம்: நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!


கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 25 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கார்கிலில் இந்த போர் நடந்தது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் கார்கில் போர் வெற்றி தினத்தின் வெள்ளி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 25 ஆண்டுதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று காலை கார்கில் வந்தார். கார்கில் வெற்றியின் 25- வது ஆண்டு நிறைவை ஒட்டி, டிராசில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். டிரசில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு