காரைக்காலில் தொடர் மழை அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது

*விவசாயிகள் வேதனை

காரைக்கால் : காரைக்காலில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் விடாமல் மழை பெய்து வந்ததால் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு, கோட்டுச்சேரி, அம்பகரத்தூர், நெடுங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4500 ஹெக்டரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது தொடர்மழையால் சம்பா பயிர்களில் 1000 ஹெக்டேர் அளவிற்கு மேல் நீரில் முழுகி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்ய முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே போதிய காவிரி நீர் கிடைக்காததால் நீரின்றி கருகினர்.பின்னர் போர் வெல் நீரை கொண்டும்,கிடைத்த மழை நீரை கொண்டும் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கன மழையால் முற்றிலும் சேதமடைந்து கடன் வாங்கி பயிர் செய்த முதலீடு கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே புதுச்சேரி அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை