கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மிக கனமழை : வானிலை ஆய்வு மையம் வார்னிங்!!

சென்னை : கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிச.16,17ல் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்றும் நாளையும் 12 முதல் 20 சென்டி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனிடையே கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி , தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு, இலங்கை கடலோரம், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளதாலும் இன்றும் நாளையும் மணிக்கு 40 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவி பாலியல் புகாரில் உண்மையில்லை: திண்டுக்கல் போலீஸ் விளக்கம்

ராத்திரியில் ரயிலில் விட்டு சென்ற ‘கல் மனசு தாய்’ ‘அம்மாவ காணோம்’… அழுது துடித்த பெண் குழந்தை

மர பொம்மை எனக்கூறி பார்சலில் கஞ்சா கடத்தல்..!!