ஜப்பானின் ஹச்சிகோ போல கண்ணூரில் ஒரு ராமு: நாயின் விசுவாசத்தை கண்டு நெகிழ்ச்சியடைந்த பணியாளர்கள்

கேரளா: கண்ணூர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் நாய் ஒன்று தினமும் காத்து கிடப்பதை முதலில் அங்கிருந்த பணியாளர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தொடர்ச்சியாக நாய் அங்கு இருப்பதை கண்டவர்கள் அதன் உரிமையாளருக்காக அது காத்திருப்பதை அறிந்துகொண்டனர். அதன் உரிமையாளர் இறந்துபோய் பிணவறைக்கு கொண்டு வந்த போது அந்த நாய் வந்திருக்கலாம் என்றும் ஆனால் சடலத்தை எடுத்து சென்றிருப்பது தெரியாமல் 4 மாதங்களாக உரிமையாளருக்காக நாய் காத்திருந்திருக்கலாம் என்றும் மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் நாயின் உரிமையாளர் யார் என்பதை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் உள்ள பிசிசியோ தெரபி கட்டடத்திற்கு அடிக்கடி செல்லும் நாய் இரவானதும் பிணவறை முன் வந்து படுப்பதை வழக்கமாக வைத்துள்ளது. நாயின் விசுவாசத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்த பலரும் அதற்கு ராமு என்று செல்ல பெயரிட்டு அழைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் யார் எதை கொடுத்தாலும் சாப்பிடாமல் இருந்த நாய் தற்போது மருத்துவமனை பணியாளர்களும், நோயாளிகளும் அளிக்கும் பிஸ்கட் போன்றவற்றை உண்கிறது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவின் வலிமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ராமுவின் பாசமும், விசுவாசமும் காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்பது மட்டுமே உண்மை.

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்