கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பெங்களூரு: சண்டிகர் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் காவலர் குல்விந்தர் கவுர், கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி பாஜ எம்.பி கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தார். விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த குல்விந்தர் கவுர், கங்கனா ரனாவத்தை பார்த்ததும் கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் போராட்டத்தை இழிவுப்படுத்தி கங்கனா பேசியிருந்ததால் அவரை தாக்கியதாக குல்விந்தர் கவுர் கூறியிருந்தார்.

இதையடுத்து குல்விந்தர் கவுர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்த குல்விந்தர் கவுர் பெங்களூருவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் குல்விந்தர் கவுர் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பணியில் சேர உள்ளார்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்