காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.18.45 லட்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18.45 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில், 3 மாதங்களுக்கு ஒருமுறை கோயில் உண்டியல்களை திறந்து எண்ணுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, கோயில் செயல் அலுவலர் கதிரவன், ஆய்வாளர் திலகவதி மற்றும் பல்வேறு கோயில்களின் செயல் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.18.45 லட்சமும், தங்கம் 31.5 கிராமும், வெள்ளி 1020 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்