காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகமதுபேட்டை பகுதியில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ சந்திரசேகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரவடிவு உத்தரவின்பேரில், எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையில் போலீசார் மகேஷ், சங்கர் ஆகியோர் ஒலிமுகமதுபேட்டை, வேலூர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவரது பையினை சோதனை செய்ததில், காஞ்சா வைத்திருந்ததால், அவரிடம் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த அசதுல்லா மகன் முஸ்தபா (26) என்பதும், தனது நண்பரான விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரகமதுல்லா மகன் நசீம்கான் ஆகிய 2 பேரும் சேர்ந்து, ஆந்திர மாநிலம் ஓஜி குப்பம் பகுதியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து விநாயகபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நசீம்கானையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், முஸ்தபா மற்றும் நசீம்கான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்