காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதியில் குழந்தைகளின் உரிமைகள் மனித சங்கிலி பேரணி: மாநகராட்சி மேயர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதியில் நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து மனித சங்கலி பேரணியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் பங்கேற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் சன்னதியில், குழந்தைகள் உரிமை தினத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், மனித சங்கிலி பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்னை தொழிற்கல்வி முதல்வர் கிருபா சங்கர் இதில் தலைமை தாங்கினார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் வெங்கட்ராமன், முதுநிலை திட்ட மேலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நிஷா அனைவரையும் வரவேற்று பேசினார்.

இப்பேரணியில் அன்னை தொழிற்பள்ளியில் பயிலும் 200 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் பள்ளி பருவ நாட்களில் குழந்தைகளின் உரிமைகளை காப்பது மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுகிடையே எடுத்துரைத்தார். இறுதியாக மேயர் மகாலட்சுமி யுவராஜ், குழந்தைகள் உரிமை சார்ந்த விழிப்புணர்வு பெயர் பலகையை வெளியிட, அன்னை தொழிற்கல்வி முதல்வர் கிருபா சங்கர் அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய மேலாளர் கீதா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, முதுநிலை திட்ட மேலாளர்கள் சுந்தர், தூயவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி