காஞ்சிபுரம் சோழன் கல்லூரியில் பாரத சாரண இயக்க அறிமுக விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள சோழன் கல்வியியல் கல்லூரியில் `வலிமையான பாரதம் படைப்போம்’ எனும் தலைப்பில், பாரத சாரணர் இயக்க அறிமுக விழா நேற்று நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் பேராசிரியர் தெ.அன்பு தலைமை தாங்கி பேசுகையில், ‘வலிமையான பாரதம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அதனை, உருவாக்க உடல் மற்றும் மனம் வலிமை பெற வேண்டியதன் அவசியம், ஆசிரியர்களின் சமூக பணிகளின் அவசியம் குறித்தும் விவரித்து பேசியதோடு, அதற்கு சாரணர் இயக்கம் வலிமை படைத்த ஆயுதம் என்றும் குறிப்பிட்டார்.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட சாரண சாரணியர் இயக்க செயலாளரும், திருக்காலிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான சந்திரசேகர் பேசினார். இந்நிகழ்ச்சியில், பாரத சாரணர் இயக்க மாநில பயிற்சியாளர் அருள்மேரி கலந்துகொண்டு சாரண இயக்க குறிக்கோள்கள், பணிகள் பற்றி விளக்கினார். இதனைத்தொடர்ந்து, மாவட்ட பயிற்சியாளர் கலைமணி சாரண இயக்க பயிற்சிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்