காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் திருவேடல் செல்வத்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் உடன் சென்றனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: காஞ்சிபுரத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்படும். செங்கல்பட்டுக்கு காஞ்சிபுரம் வழியாக செல்லும் ரயில் பாதை இருவழி பாதையாக மாற்றி தரப்படும்.

செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த நோய் தடுப்பு மருந்து உற்பத்தி மேம்படுத்தி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் கிழக்கு ரயில்வே நிலையத்தில் செயல்படும் பல தரப்பட்ட சரக்கு போக்குவரத்தும் ஆசியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சரக்கு முனையமாக செயல்படும், மேலும் மேம்படுத்தப்படும்.

காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார மக்களுடைய தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் மின்சார ரயில் சேவை வழங்க வலியுறுத்தப்படும், காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு பட்டு, ஜரிகை போன்ற மூலப் பொருட்களுக்கு முழுமையாக ஜிஎஸ்டி வரி நீக்கப்படும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கண்டிப்பாக தரப்படும். இதெல்லாம் தலைவர் தேர்தல் அறிக்கையில் இந்தியா கூட்டணி ஜெயிச்சா கண்டிப்பா செஞ்சு கொடுப்பேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

நம்பிக்கை உங்களுக்கு இருக்கா இல்லையா முழுவதும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளார். சொல்வதை செய்வோம் செய்வதே தான் சொல்வோம் என்று செய்து காட்டும் தலைவர். இந்த முறை பெண்களுக்கு மட்டும் கிடையாது. இனிமே நான் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி பத்து வருஷம் ஆட்சி செய்து வருகிறார், இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு ஏதாவது செஞ்சு இருக்காரா 28 பைசா கொடுத்திருக்காரு அவர் நிறைய வடையை சுடுவாரு எதுவுமே மசால் வடை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது