காஞ்சிபுரம் மாநகராட்சி குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த கவுன்சிலர்கள்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையாக திமுகவினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு, எதிராக திமுக கவுன்சிலர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டரிடம் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர வேண்டுமென மனு அளித்திருந்தனர். இந்தநிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் வரி விதிப்பு குழு, நகர அமைப்பு குழு, கணக்கிட்டு குழு, பொது சுகாதார குழு நான்கு குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள், 10 கவுன்சிலர்கள், குழு உறுப்பினராக இருந்தவர்கள் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பணிகள் குழு ராஜினாமா செய்த நிலையில், தற்பொழுது 4 குழுக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். தொடர்ந்து நேற்று திமுக, அதிமுக, பாமக கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம், நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்