காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் அகழாய்வில் தமிழ் – பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடு கண்டுபிடிப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் எழுத்து பொரிப்புடன் கூடிய பானை ஓடு கிடைத்துள்ளது. இது முக்கிய கண்டுபிடிப்பு என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தை அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.

இதையடுத்து மே மாதம் 19-ம் தேதி தொடங்கிய 2-ம் கட்ட அகழாய்விலும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இதுவரை 10 மீட்டர் நீள அகலம் கொண்ட 6 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றனர். மொத்த 800 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், தற்போது தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் உள்ள பானை ஓடு சுடுமண் பொம்மைகள், அணிகலன் போன்றவை கிடைத்துள்ளன. வடதமிழ்நாட்டில் இதுவரை காஞ்சிபுரம், பட்டறைபெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளை கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை கி.மு. முதலாம் நூற்றாண்டை சார்ந்தவை என தெரிய வந்துள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு அரிவாள் வெட்டு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து