காஞ்சிபுரம் வருகை வந்த முதல்வருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு

காஞ்சிபுரம்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட தொடக்க விழாவுக்கு காஞ்சிபுரம் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 4 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 10 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை துவங்கிவைத்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.முன்னதாக, திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக காஞ்சிபுரம் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய 2 இடங்களில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் கருணாநிதி, எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், து.மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்மணி, எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், ஆர்.டி.அரசு, குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சி.அன்புச்செழியன், ஆதிமாறன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், பகுதி செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், த.ஜெயகுமார், வே.கருணா நிதி, ஜோசப் அண்ணாதுரை, ஏ.கே.கருணாகரன், இ.எஸ்.பெர்னாட், செம்பாக்கம் சுரேஷ், மாடம்பாக்கம் நட ராஜன், பெருங்களத்தூர் சேகர், து.காமராஜ், எஸ்.இந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, பையனூர் எம்.சேகர், வி.எஸ்.ஆராமுதன், ஏ.வந்தேமாதரம், மூவரசம்பட்டு ரவி, ஆப்பூர் பி.சந்தானம், காஞ்சி டாக்டர் கா.சு.வீரமணி, நகர செயலாளர்கள் எஸ்.நரேந்திரன், ஜெ.சண்முகம், டி.பாபு, எஸ்.ஜபருல்லா, கோ.சத்திய மூர்த்தி, பேரூர் செயலாளர்கள் மு.தேவராஜ், ஜி.டி.யுவராஜ், ஆர்.சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

* க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் தெற்கு மாவட்ட திமுக வரவேற்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க காஞ்சிபுரம் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ராஜகுளம், பொன்னேரிக்கரை ஆகிய 2 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், திமுக மாணவரணி மாநில செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ, அவைத்தலைவர் ச.இனியரசு, மாவட்ட துணை செயலாளர்கள் மலர்விழி, டிவி.கோகுலகண்ணன், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் மற்றும் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் கலந்துகொண்டனர். சாலையின் இருபுறமும் வாழை மர தோரணங்களுடன் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர திமுக செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், பி.எம்.பாபு, ஞானசேகரன், சேகரன், குமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் சாட்சி சண்முகசுந்தரம், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், எஸ்கேபி.கார்த்திக், விஸ்வநாதன், மல்லிகா ராமகிருஷ்ணன், பேரூர் செயலாளர் கள் பாண்டியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்கேபி.சீனிவாசன், சிகாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்,

மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர்கள் முத்துசெல்வம், ஜெகநாதன், நிர்மலா, பொருளாளர் சுப்பராயன், மாவட்ட இளைஞரணி யுவராஜ், மாணவரணி ராம்பிரசாத், சுரேஷ்குமார், மாவட்ட பொறியாளரணி தலைவர் தாஸ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் டில்லிபாபு, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் பூங்கொடி பழனி, பகுதி செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், மண்டல தலைவர்கள் சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், சாந்தி கணேஷ், காஞ்சி கா.சு.வீரமணி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்