காஞ்சி, செங்கையில் 158 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்: தொடர் மழையின் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர்வரத்து வந்துக்கொண்டு இருப்பதால் உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி, வெங்கச்சேரி, பழைய சிவரம் உள்ளிட்ட 158 சிறிய ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

அதன்படி, ஏரியில் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் இருக்கின்றன. இதில், மேற்கூறிய 45 ஏரிகள் 100 சதவீதமும், 35 ஏரிகள் 75 சதவீதமும், 95 ஏரிகள் 50 சதவீதமும், 158 ஏரிகள் 25 சதவீதமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில், 113 ஏரிகள் 100 சதவீதமும், 154 ஏரிகள் 75 சதவீதமும், 145 ஏரிகள் 50 சதவீதமும், 103 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. மேலும், மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான செங்கல்பட்டு – கொளவாய் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் தையூர், மானாமதி, கொண்டங்கி, காயார், சிறுதாவூர் மணிமங்கலம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு