காஞ்சி, செங்கையில் 193 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 193 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கனமழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதன்படி, ஏரியில் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் இருக்கிறது. இதில், மேற்கூறிய 56 ஏ‘ரிகள் 100 சதவீதமும், 36 ஏரிகள் 75 சதவீதமும், 61 ஏரிகள் 50 சதவீதமும், 171 ஏரிகள் 25 சதவீதமும் தண்ணீர் நிரம்பி உள்ளன.

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில், 137 ஏரிகள் 100 சதவீதமும், 194 ஏரிகள் 75 சதவீதமும், 132 ஏரிகள் 50 சதவீதமும், 52 ஏரிகள் 25 சதவீதமும் தண்ணீர் நிரம்பி உள்ளன. மேலும், குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கும் உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான செங்கல்பட்டு – கொளவாய், தையூர், மானாமதி, கொண்டங்கி போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்