காஞ்சிபுரத்தில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் வட்டத்தில் கூரம், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர், வாலாஜாபாத் வட்டத்தில் மாகறல், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் பிள்ளைப்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் மலையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன.மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவுமாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி, மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்