கம்மவார்பாளையம் ஊராட்சியில் ரூ.35 லட்சத்தில் பள்ளி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் கம்மவார் பாளையம் ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மற்றும் சமையலறை கட்டிடத்தை எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மவார் பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் குழந்தை நேயப் பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்தில் பள்ளி கட்டிடம், ரூ.7 லட்சத்தில் சமையலறை கட்டிடம் ஆகியவற்றுக்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த திறப்பு விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றியக்குழு தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி தலைமை தாங்கினார். மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி இளஞ்செல்வி பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில், ஒன்றிய கவுன்சிலர் அமுதா தனஞ்செழியன், துணைத் தலைவர் சந்திரமவுலி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜமுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை