கம்மாபட்டி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடை: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

ராஜபாளையம், ஏப்.29: ராஜபாளையம் தொகுதியில் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி கம்மாபட்டி கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலைக்கடையை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மை பகுதிநேர நியாய விலைக்கடைக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்து பேசிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைக்கு ஊரில் அரசு புறம்போக்கு நிலம் இருக்கும்பட்சத்தில் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக சொந்த கட்டிடம் கட்டி தரப்படும்.

தொகுதியில் எங்கெல்லாம் பகுதிநேர நியாய விலைக்கடை தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து அங்கெல்லாம் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாஸ்கர், மேலாண்மை இயக்குனர் மாரீஸ்வரன், சார்பதிவாளர் ரவிச்சந்திரன், வட்டார வழங்கல் அலுவலர் ராமநாதன், கவுன்சிலர் அனுசுயாகண்ணன், ஊர் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து