கமலா ஹாரீசுக்கு பிரசாரம் 3,60,000 தன்னார்வலர்கள் பதிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் 3லட்சத்து 60ஆயிரம் தன்னார்வலர்கள் சேர்ந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. பல்வேறு காரணங்களால் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான பைடன் விலகினார். இதனையடுத்து குடியரசு கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்பை எதிர்த்து துணை அதிபர் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். கமலா ஹாரீஸ் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக தன்னை வேட்பாளராக அறிவித்தார். அடுத்த மாதம் சிகாகோவில் நடக்கும் மாநாட்டில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக முறைப்படி அவர் அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில் கமலா ஹாரீசுக்கான ஆதரவு பெருகி வருகின்றது. ஒரே வாரத்தில் சுமார் 200 மில்லியன் டாலர் தேர்தல் பிரசார நிதி சேர்ந்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு புதிய நன்கொடையாளர்கள். மேலும் கமலா ஹாரீஸ் பிரசாரத்தில் 3,60,000 தன்னார்வலர்கள் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்