Saturday, September 21, 2024
Home » ஒரு தமிழன் பிரதமராக பதவியேற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் : கமல்ஹாசன்

ஒரு தமிழன் பிரதமராக பதவியேற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் : கமல்ஹாசன்

by Porselvi
Published: Last Updated on

சென்னை : ஒரு தமிழன் பிரதமராக பதவியேற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் 2வது பொதுக்குழுவில்   அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், “நான் அரசியலுக்கு வந்தது எனக்காக அல்ல. நமக்காக கூட அல்ல. நாளைக்காக…தோற்ற அரசியல்வாதியை கூட நம் மக்கள் நினைவில் வைத்து இருப்பார்கள். தோற்ற அரசியல்வாதி என என்னைதான் கூறுகிறேன். தோல்வி என்பதும் நிரந்தரம் அல்ல, அதேபோல் பிரதமர் பதவி என்பதும் நிரந்தரம் அல்ல.ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது மிகவும் ஆபத்தானது. இது எவ்வளவு பெரிய தவறு என்பது உலக அரசியலுக்கே தெரியும். இந்தியாவிற்கு இது தேவையில்லை”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

nineteen + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi