காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்

காஞ்சிபுரம்: கேரளாவில் வரலாறு காணாத மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து துரிதமாக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரவில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட பீடாதிபதி காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திரரின் வேண்டுகோளின்படி கேரளா மாநில வயநாட்டில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் கிழக்கு ராஜ கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.மேலும், நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து