கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? : தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!

சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 66 பேர் பலியாகினர். கள்ளச் சாராயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சப்படுவதாக தகவல் வெளியான நிலையில், கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, மேற்கண்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது .

அப்போது நஇருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?. பட்டியலின, பழங்குடியின மக்களின் சலுகைகள் அவர்களை சென்றடைந்துள்ளதா?.
அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள் கல்வராயன் மலைப்பகுதி மக்களை சென்றடைந்துள்ளதா?. மக்களின் ஓட்டுகளை பெற்ற பின், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா?இல்லையா ? என்பதை கவனிக்கவில்லை என்றால் அரசின் அரசியலமைப்பு கடமை என்ன?

இத்தனை ஆண்டுகளாக கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர்?. இவ்வாறு கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, ஜூலை 24ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு; திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மூவர்ணக் கொடியுடன் அணிவகுத்த இந்திய வீரர்கள்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81,552 கனஅடியில் இருந்து 93,828 கனஅடியாக அதிகரிப்பு!