கல்வராயன் மலை பகுதியில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கல்வராயன் மலை பகுதியில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து விசாரணையை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு