கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அப்ரன்டிஸ்

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 44.

டிரேடு வாரியாக காலியிடங்கள் விபரம் வருமாறு:

Machinist-1, Electrician-8, Fitter-6, Draughtsman (Mechanical)-1, Digital Photographer/Photographer-1, Maintenance Mechanic (Chemical Plant)/ Fitter- 10, Instrument Mechanic-11, Mechanic Refrigeration and Air Conditioning-3, COPA-3.
பயிற்சி காலம்: ஒரு வருடம்.

வயது: 02.08.2024 தேதியின்படி 16 முதல் 24க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

உதவித் தொகை: ஒரு வருட ஐடிஐ படிப்பை முடித்தவர்களுக்கு ரூ.7,700. 2 வருட ஐடிஐ படிப்பை முடித்தவர்களுக்கு ரூ.8,855 வழங்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி மையத்தில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 137 செ.மீ., உயரம், அதற்கேற்ற எடை இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் முதலில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.bhavini.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.08.2024.

 

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி