கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்த நிலையில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்து விழுவதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் 2 மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அப்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து நீரோடைகள், நீர்வீழ்ச்சி மற்றும் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

குறிப்பாக ஊட்டி அருகே உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, காட்டேரி நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் சொல்வது வழக்கம். கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துச் செல்வார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்து அளவிற்கு பெய்யவில்லை. இதனால், அனைத்து அணைகளிலும் தண்ணீர் குறைந்தே காணப்படுகிறது. மேலும் நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. ஊட்டி அடுத்து உள்ள கல்லடி நீர்வீழ்ச்சியிலும் தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்து விழுவதால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்