கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: சிபிஐக்கு மாற்றக்கோரிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாமக, பாஜக மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு மீதான விசாரணையில், எஸ்.பி. மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். எஸ்.பி.க்கு நேரடி தொடர்பில்லை; எஸ்.பி. மீதான துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் போலீசை நியமிக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்