கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக மேலும் 2 பேர் கைது: சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார் மற்றும் கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அய்யாசாமி மற்றும் தெய்வாரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கர்ணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழ்ந்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐசிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுவரும் முக்கிய குற்றவாளிகள், மற்றும் அவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்த நபர்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

நேற்று வரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக அய்யாசாமி மற்றும் தெய்வாரா ஆகிய 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து மெத்தனால் முதற்கட்டமாக மெத்தனால் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்தது யார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்