கள்ளழகர் கோயில் தோசை

தேவையானவை:

புழுங்கல் அரிசி,
பச்சரிசி – ¾ கப்,
உளுத்தம் பருப்பு ½ கப்,
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
கரகரப்பாக பொடித்த மிளகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி தனியாகவும், கறுப்பு உளுந்து தனியாகவும் அலம்பி 3 மணி நேரம் ஊறவிடவும். தனித்தனியாக அரைத்து, உப்பு சேர்த்து கலக்கவும். துருவின இஞ்சி, மிளகு, சீரகம் பொடித்து, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து புளிக்க விடவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். அழகர் கோயில் மடப்பள்ளியிலிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட பெருமாள் பிரசாதம் இது.

Related posts

காலிஃபிளவர் புலாவ்

சிக்கன் சுக்கா

முட்டை ஸ்டப்டு பூரி