‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது: படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

சென்னை: ‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள திரைப்படம் கல்கி 2898. பிரபாஸ் நடித்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன், பிரபாஸ் உள்ளிட்ட பிரபல பட்டாளங்களே நடித்துள்ளனர். சுமார் 600 கோடி செலவில் 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்டுவரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள கல்கி 2898 AD கலியுகத்தில் கடைசிக் கட்டத்தில் தோன்றும் கல்கி துஷ்ட சக்திகளை அழித்து கலியுகத்தை முடித்து வைப்பது போன்று நவீனதொழில்நுட்பங்களை பயன்படுத்தி இப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் , கல்கி படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டதாக படக்குழுவை பாராட்டி இருக்கிறார். இரண்டாம் பாகத்திற்கு ஆர்வமாக காத்திருப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

சிவில் இன்ஜினியரை தாக்கிய பா.ம.க. நிர்வாகிக்கு வலை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1038 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு