சித்திரை பெருவிழாவையொட்டி வேதகிரீஸ்வரர் கோயிலில் கால்கோள் நிகழ்ச்சி

திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி கால்கோள் விழா நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் திருக்கோயிலானது உலக பிரசித்திப்பெற்ற சிவ தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.

அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா வரும் சித்திரை மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், கால்கோள் எனப்படும் பந்தல்கால் நடும் விழா கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க திரிபுரசுந்தரியம்மன் சன்னிதானம் எதிரே உள்ள கொடிமரம் அருகே ஒரு பந்தல்கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பஞ்ச ரதங்களுக்கு (தேர்களுக்கு) சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவின் போது கோயில் செயல் அலுவலர் பிரியா, மேலாளர் விஜயன் மற்றும் உபயதாரர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்