கலைஞர் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

*அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலமாக சென்று அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்
பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலைஞர் படத்திற்கு மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர் கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கலைஞர் படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன்பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம், திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அரங்கத்தில் முடிவடைந்தது. அங்குள்ள கலைஞரின் சிலை முன்பு அலங்கரிக்கபட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநில நெசவாளரணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், சின்னப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், அயலக அணி அமைப்பாளர் வக்கீல் அசோக், மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மகளிரணி கவிதாதேவி, சுற்றுச்சூழல் அணி ஜெபசிங்,

வழக்கறிஞரணி மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சக்திவேல், நாராயணன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சுபேந்திரன், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பாலகுருசாமி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர தொழிலாளரணி அமைப்பாளர் முருகஇசக்கி,

தொமுச செயலாளர் மரியதாஸ், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், ரவி, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, இலக்கிய அணி நலம் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணியினர் மார்க்கின் ராபர்ட், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, அந்தோணி பிரகாஷ் மார்சிலின், தெய்வேந்திரன், வைதேகி, கந்தசாமி, சரண்யா, வட்ட செயலாளர்கள் கதிரேசன், ரவீந்திரன், ராஜாமணி, பாலு (எ) பாலகுருசாமி, செல்வமாரியப்பன், சுரேஷ், லியோ ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்