Monday, September 23, 2024
Home » காளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகை நமீதா சிறப்பு பூஜை

காளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகை நமீதா சிறப்பு பூஜை

by Suresh

காளஹஸ்தி :காளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகை நமீதா, கணவருடன் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நமீதா. இவர் நேற்று ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலுக்கு தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் வந்தார். கோயிலில் நடந்த ராகு-கேது சர்ப்ப தோஷ சிறப்பு நிவாரண பூஜையில் இருவரும் பங்கேற்றனர். அதன்பிறகு காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தனர்.

சுவாமி தரிசனம் செய்து கொண்ட அவர்களுக்கு கோயில் வளாகத்தில் தீர்த்த பிரசாதங்களையும் சுவாமி படத்தையும் கோயில் நிர்வாகத்தினர் வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்த நடிகை நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு நமீதாவும் கணவரும் காரில் ஏறி சென்றனர்.

You may also like

Leave a Comment

12 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi