காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

திருமலை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா முன்னாள் எம்.எல்.ஏ. துவரம்புடி சந்திரசேகர் ரெட்டிக்கு சொந்தமான கட்டுமானத்தில் உள்ள கட்டிடம் விதி மீறி அனுமதியின்றி கட்டப்பட்டதாக புகார் வந்தது. அதன்பேரில் அந்த கட்டிடத்தை நகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்து தள்ளினர். இதனை தடுக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ துவாரம்புடி சந்திரசேகர் அவரது ஆதரவாளர்களை போலீசார் இழுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே முன்னாள் முதல்வர்ஜெகன் மோகனின் வீடு உள்ள தாடேபள்ளியின் இரும்பு வேலிகளை அகற்றிய கூட்டணி அரசு, மற்ற தலைவர்களின் சட்டவிரோத கட்டிடங்களை இடித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது காக்கிநாடாவில் பவன் கல்யாண் நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை நடுரோட்டில் வைப்பேன். உங்களின் விதிமீறல் கட்டுமானங்களை இடிப்பேன் என்று பேசினார். இன்றும் அதையே செய்தார் என்று இப்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி