காக்கிநாடா சஞ்சய் நகர் பகுதியில் அம்மனை தரிசனம் செய்வது போல் வந்து உண்டியலை தூக்கி சென்ற டிப்டாப் வாலிபர்

*சிசிடிவி கட்சிகள் வைரல்

திருமலை : காக்கிநாடா சஞ்சய் நகர் பகுதியில், அம்மனை தரிசனம் செய்வது போல் வந்து உண்டியலை தூக்கி சென்ற டிப்டாப் வாலிபரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா சஞ்சய் நகர் பகுதியில் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கடந்த 20ம் தேதி டிப்டாப் உடையுடன் ஒரு வாலிபர் வந்தார். கோயிலுக்கு வெளியே தனது காலணியை கழற்றிவிட்டு பக்தியுடன் அம்மனை தரிசனம் செய்வது போல் உள்ளே சென்றார்.

உள்ளே யாரும் இல்லாததை உறுதி செய்த வாலிபர் கோயில் முழுவதும் நோட்டமிட்டு கோயில் வளாகத்திலேயே சிறிது நேரம் அமந்திருந்தார். அதன்பின்னர், வேகமாக கோயில் உள்ள சென்று பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டிருந்த உண்டியலை கழற்றி அலேக்காக தூக்கி தூக்கி தான் கொண்டு வந்து கோணிப்பையில் மறைத்து தோள் மீது வைத்துக்கொண்டு ஹாயாக சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் கோயில் உண்டியல் திருடுபோனதையறிந்த கோயில் நிர்வாகத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்போரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கோயில் உண்டியலை திருடிச்செல்லும் மர்ம நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடந்தி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் போல் வந்து அம்மன் கோயல் உண்டியலை கழற்றி மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை