கடமலை – மயிலை ஒன்றியத்தில் விரைவில் அவரைக்காய் விலை உயரும்

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் அவரைக்காய் விலை சரிவடைந்துள்ளது.கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு, வருசநாடு, குமணன்தொழு, சிதம்பரவிளக்கு, மூலக்கடை, முத்தாலம்பாறை, தாழையூத்து, தும்மக்குண்டு, வாலிப்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் அவரை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. போதுமான அளவு மழை பெய்ததால் இந்த சீசனில் அவரை உற்பத்தி அதிகளவில் காணப்படுகிறது. உற்பத்தி அதிகரித்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அவரை ஒரு கிலோ 40 ரூபாய்முதல்45 ரூபாய் வரை சந்தைகளில் விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரைக்காய் வரத்து அதிக அளவில் உள்ளதால் தற்போது அவரைக்காய் ஒரு கிலோ 28 முதல் ரூபாய் 30 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. கடந்த சில நாட்களில் பல மடங்கு அளவு விலை குறைந்ததால் விவசாயிகளுக்கு அதிக அளவில் பெருத்த இழப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விளைச்சல் அதிக அளவில் உள்ளதால் அடுத்து வரும் நாட்களில் அவரை விலை படிப்படியாக கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி