கடலைமாவு பாயசம்

தேவையானவை:

கடலைமாவு – ஒரு கப்,
சர்க்கரை – ஒரு கப்,
பால் – 2 கப்,
தேங்காய்ப்பால் -அரை கப்,
முந்திரிப்பருப்பு,
கிஸ்மிஸ் – தேவைக்கேற்ப,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்தூள் -சிறிதளவு.

செய்முறை:

கடலைமாவை வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் வறுத்தெடுங்கள். வாசம்வரும்வரை வறுத்தவுடன் அதை கீழே இறக்கி ஆறவைத்து, ஒரு கப் பால் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து, மீதமுள்ள பாலை ஊற்றி நன்கு கொதிவந்தவுடன் சர்க்கரையைப் போட்டு கொதித்தவுடன் இறக்குங்கள். முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் வறுத்துஅதில் போடுங்கள். ஏலக்காய் பொடி சேர்த்து, கூடுதல் மணத்துக்கு தேவையானால் லேசாக பச்சை கற்பூரத்தை பொடித்து போடலாம். இறக்கிய பின் தேங்காய்ப்பால் விட்டு கிளறுங்கள்.

Related posts

கருணைக்கிழங்கு லைம் மசியல்

வயலட்கோஸ் கூட்டு

பச்சை மிளகாய் தொக்கு