கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி நீர் திறப்பு!


பெங்களூரு: கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. 84 அடியாக உள்ள கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 83.30 அடியை எட்டியுள்ளது. வயநாடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கபினி அணையின் பாதுகாப்பு கருதி மொத்த நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. காலையில் 5,000 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் தற்போது வினாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 19,181 கன அடியாக உள்ள நிலையில் 20,000 கனஅடி நீர்த்திறக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தொடர்ந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 104.60 அடியாக உள்ளது.

Related posts

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!!

வாடிக்கையாளர்களுக்கு சலுகை: டாடா எலக்ட்ரிக் கார்களின் விலை குறைப்பு

மணிப்பூரில் செப். 15 வரை இணையதள சேவை முடக்கம்!!