கபடி பைனலில் இந்திய அணிகள்

மகளிர் கபடி முதல் அரையிறுதியில் இந்தியா-நேபாளம் அணிகள் நேற்று மோதின. அதில் வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் மளமளவென புள்ளிகளை குவித்து முன்னேறினர். அதனால் இந்தியா 61-17 என்ற புள்ளிக் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் சீன தைபே அணி 35-23 என்ற புள்ளிக் கணக்கில் ஈரான் மகளிர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடைபெறும் தங்கம், வெள்ளிப் பதக்கங்களுக்கான பைனலில் இந்தியா – சீன தைபே மோதுகின்றன. அரையிறுதியில் வாய்ப்பை இழந்த நேபாளம், ஈரான் மகளிர் அணிகளுக்கு வெண்கலப்பதக்கம் உறுதியானது. ஆண்கள் கபடி முதல் அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 61-14 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வென்றது. 2வது அரையிறுதியில் ஈரான் – சீன தைபே அணிகள் மோதின. அதில் ஈரான் 47-24 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இன்றைய பைனலில் இந்தியா-ஈரான் அணிகள் மோத உள்ளன. பாகிஸ்தான், சீன தைபே ஆண்கள் அணிகளுக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படுகிறது,

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு