வாச்சாத்தி வழக்கில் நீதி வென்றுள்ளது: ராமதாஸ் அறிக்கை

சென்னை: வாச்சாத்தி வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமாகவேனும் நீதி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகாவது சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் மனிதர்களையும், மனித உரிமைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

கொங்கும், டெல்டாவும் அழுத்தம் தருகிறது ஆபத்தான நிலையில் அதிமுக பரிதாப நிலைமையில் இபிஎஸ்: அமைச்சர் ரகுபதி பேட்டி

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு: ஈரோடு அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரிடம் விசாரணை

கோவை பாரதியார் பல்கலை. மாணவன் விடுதியில் தற்கொலை