அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; நீதித்துறைதான் எங்களுக்கு கோயில்: தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முதல்வர் மம்தா பரபரப்பு பேச்சு

கொல்கத்தா: நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்ற நீதித்துறை தொடர்பான மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். நீதித்துறையின் தற்கால வளர்ச்சிகள் குறித்த மாநாடு கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய மம்தா பானர்ஜி, ‘நீதித்துறை எங்களுக்கு மிக முக்கிய கோயில்.

இது, கோயில், மசூதி, குருத்வாரா போன்றது. நீதித்துறையில் இருப்பவர்கள் அனைவரும் நாட்டுக்கும் உலகிற்குமான சொத்து. யாரையும் அவமானப்படுத்துவது எனது நோக்கமல்ல, ஆனால் நீதித்துறையில் அரசியல் சார்பு இல்லை என்பதை தயவுசெய்து பார்க்க வேண்டும். நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும். மக்கள் அதை வணங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்